ஏப்ரல் மாதம் வரட்டும்... திமுகவினரை மக்கள் ஓடஓட விரட்ட போறாங்க... தெறிக்கவிடும் எல்.முருகன்..!

Published : Jan 30, 2021, 09:51 PM IST
ஏப்ரல் மாதம் வரட்டும்... திமுகவினரை மக்கள் ஓடஓட விரட்ட போறாங்க... தெறிக்கவிடும் எல்.முருகன்..!

சுருக்கம்

தமிழக பொதுமக்கள் திமுகவினரை ஏப்ரல் மாதம் ஓட ஓட விரட்ட உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் இன்று மதுரையில் தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டது. இதற்கான பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், “நாமெல்லாம் வேல் பூஜைகளை வீட்டில் இருந்தபடி செய்தோம். கொரோனா காலத்தில் மற்ற கட்சிகள் எல்லாம் பயந்து மக்களை சந்திக்காமல் இருந்த நிலையில், பாஜகதான் வேல் யாத்திரையை நடத்தியது. பாஜக வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கியது. இன்று அதே இடத்தில் திமுகவினரை வேல் தூக்க வைத்தது பாஜகதான்.
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் திமுக துரோகம் அதிகம் செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்தது திமுகதான். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தாரை வார்த்ததும் திமுகதான். கமிஷன் , ஊழல், நில அபகரிப்பு ஆகியவற்றையும் திமுகவையும் பிரிக்கவே முடியாது. கந்த கஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எந்தக் கருத்தையும் கூறவில்லை. தமிழக பொதுமக்கள் திமுகவினரை ஏப்ரல் மாதம் ஓட ஓட விரட்ட உள்ளனர்.


திமுகவை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றால் அவர்கள் தேசத்துக்கு விரோதமானவர்கள். சமுகநீதியைப் பற்றி பேசும் திமுக, சமுகநீதியைக் கடைபிடிக்காது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தாமரைக்கு தாமரை சொந்தங்கள் அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும்” என எல். முருகன் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!