வேணும்னா சசிகலா பாஜகவுக்கு போகட்டும்.. அதிமுகவில் அவருக்கு ஒருபோதும் இடமில்லை.. நத்தம் விஸ்வநாதன்.!

Published : Jun 09, 2022, 02:38 PM IST
வேணும்னா சசிகலா பாஜகவுக்கு போகட்டும்.. அதிமுகவில் அவருக்கு ஒருபோதும் இடமில்லை.. நத்தம் விஸ்வநாதன்.!

சுருக்கம்

 கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து ஏன் பேச வேண்டும்? அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமே இல்லை. பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும்.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரட்டை தலைமையில் நன்றாக செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்;- சசிகலாவை ஒரு போதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரைப் பற்றி பேசவேண்டிய அவசியமும் இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து ஏன் பேச வேண்டும்? அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமே இல்லை. பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும். 

அதிமுகவில் அவருக்கு இடமில்லை. அதிமுகவைப் பொறுத்தவரையில் எதுவாக இருந்தாலும் பொதுக்குழு எடுக்கும் தீர்மானம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது. திமுகவும் மின்தடை பிரச்சனையும் பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை பிரச்சனை வந்துவிடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான். அதிமுக மட்டுமே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!