முதல் தடுப்பூசியை மோடி போட்டுக்கொள்ளட்டும். இது கொரோனா தடுப்பூசி அல்ல பாஜக தடுப்பூசி. எதிர்கட்சிகள் தாறுமாறு.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2021, 4:01 PM IST
Highlights

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜ் பிரதாப் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி முதலில் கொரோன தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும், பிறகு அதை  மக்களாகிய நாங்கள் பயன்படுத்த தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்  தடுப்பூசி  இன்னும் சில தினங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக்கொள்ள வேண்டும்  எனவும், அதன்பிறகு மக்கள் அதை போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர் எனவும்,  ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜ் பிரதாப் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பிரிட்டனில் உருவான புதிய வகை வைரஸ் ஒட்டுமொத்த உலக  நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அது இந்தியாவிலும் தென்பட தொடங்கியுள்ளது. அதேபோல் கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை என உருவாக வாய்ப்புள்ளதால், தடுப்பூசி என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இந்நிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் மறுபுறம் நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகத்திற்கான ஒத்திகை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவ்விரு தடுப்பூசிகளும் மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது என்றும். இன்றும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக மத்திய அரசு, இத் தடுப்பூசி பரிசோதனை முழுமை பெறாததற்கு முன்னரே இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறது எனவும். இது மக்களின் உயிருடன் விளையாடும் அபத்தான முடிவு என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது. முழு பரிசோதனையும் நிறைவு பெறுவதற்கு முன்னர் அனுமதி வழங்க கூடாது என்றும், தனியார் மருந்து நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது எனவும் எதிர்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து செய்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜ் பிரதாப் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பிரதமர் மோடி முதலில் கொரோன தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும், பிறகு அதை  மக்களாகிய நாங்கள் பயன்படுத்த தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்  சிங்கும் தடுப்பூசி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். கடுமையான போராட்டத்திற்கு இடையில் விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் திறமையை எப்போதும் நாங்கள் கேள்வி கேட்கவோ விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அவசர கதியில் பாஜக இந்த தடுப்பூசியை கொண்டு வந்திருக்கிறது. எனவே இதன் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் இதை நம்பவேயில்லை என்ற அவர், இது கொரோனா தடுப்பூசி அல்ல, இது பாஜக தடுப்பூசி என விமர்சித்துள்ளார்.
 

click me!