ஜெ.அன்பழகன் மறைவு அரசியல் கட்சியினருக்கு பாடம்... டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை..!

Published : Jun 10, 2020, 10:15 AM ISTUpdated : Jun 10, 2020, 11:45 AM IST
ஜெ.அன்பழகன் மறைவு அரசியல் கட்சியினருக்கு பாடம்... டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை..!

சுருக்கம்

மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள அவர், ‘’தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது. கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற  பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!