
பாஜக கட்சியை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசை சௌந்தரராஜனும் காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் இன்னும் சைலன்ட்டாக அடக்கி வாசிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
காவிரி இறுதி தீர்ப்பு வந்த பின்பும் மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஆறு வார காலம் காத்திருந்து கழுத்தை அறுத்தது மத்திய அரசு. நேற்றோடு இதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.
இதற்க்கு காரணம், கர்நாடகாவில் தேர்தலை மனதில் வைத்து பாஜக கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க எப்போதுமே வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதிக்கும் தமிழக பாஜக கட்சி இதுவரை பெரிய அளவில் குரல் கொடுக்காமல் இருப்பதை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கலாய்த்துள்ளார்.