நடிகைகளை கற்ப்பழிச்சாங்க... ஸ்டாலின் நண்பர்களை கொன்னுட்டாங்க... எல்லாம் இவங்க ஆட்சியில நடந்துச்சு பகீர் கிளப்பிய கே.பி.முனுசாமி!

Published : May 07, 2019, 07:34 PM IST
நடிகைகளை கற்ப்பழிச்சாங்க... ஸ்டாலின் நண்பர்களை கொன்னுட்டாங்க... எல்லாம் இவங்க ஆட்சியில நடந்துச்சு பகீர் கிளப்பிய கே.பி.முனுசாமி!

சுருக்கம்

இவங்க ஆட்சியில நடிகைகள் எல்லாம் மானபங்கப்படுத்தப்பட்டனர், தினகரன் அலுவலகம் தீவைத்து மூன்று பேரைக் கொன்றனர். ஸ்டாலின் நண்பர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர் என கே.பி முனுசாமி கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள், கழக முன்னோடிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வில்லாபுரம் பகுதியில் கழக தேர்தல் அலுவலக திறப்பு விழா மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி; தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் ஸ்டாலின் அம்மாவின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வருகிறார். இவங்க ஆட்சியில் நடிகைகளை எல்லாம் மானபங்கப் படுத்தப்பட்டனர்.

இவங்க ஆட்சியில் தான், மதுரையில் இவங்க சொந்தக்காரங்களுக்கு உள்ள தினகரன் அலுவலகத்தை தீ வைத்துக் கொடுத்தியும், அதில் வேலை பார்த்த 3 அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமா செஞ்சாங்க ஸ்டாலின் நண்பர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இது போன்ற நிகழ்வு கழக ஆட்சியில் நடைபெற்றதாக சொல்ல முடியுமா? என பல்வேறு கேள்விகளை அடுக்கினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!
‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்