கோயம்பேடு சந்தையை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு : வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2020, 12:24 PM IST
Highlights

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு வணிக வளாகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடி இருக்க கூடிய காய்கறி சந்தைகளை திறக்க வேண்டும் என்ற 10 அம்ச கோரிக்கைகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு வணிக வளாகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடி இருக்க கூடிய காய்கறி சந்தைகளை திறக்க வேண்டும் என்ற 10 அம்ச கோரிக்கைகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்த்தார், அப்போது அவர் பேசியதாவது.  கோயம்பேடு மார்கெட் உட்பட தமிழகம் முழுவதும் மூடி இருக்க கூடிய காய்கறி, பழக்கடை திறக்க வேண்டும் என்பதற்காக முதல்வரை சந்தித்தோம். சுமார் 15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வர் கனிவுடன் எங்கள் கோரிக்கையை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சந்தைகளை திறப்பதற்  கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். என தெரிவித்த அவர், முதல்வர் எங்கள் கோரிக்கைகளை ஏற்று கொள்வதாக நம்பிக்கை அளித்துள்ளார். 

மிக விரைவில் காய்கறி சந்தை திறக்க தேதி அறிவிக்கப்படும் என நம்பிக்கை எழுந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் பேரவை தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா அனைவருக்கும் வந்து செல்லும். இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் அழுகும் தன்மை கொண்ட காய்கறி, பழ சந்தை மூட படவில்லை. மூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். அதேபோல இ-பாஸ் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்த அவர், உடனடியாக இ-பாஸ் ரத்து செய்யப்படும் அறிவிப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
 

click me!