கோடநாடு கொலை விவகாரம்... சயன், மனோஜுக்கு கடும் நெருக்கடி!

By Thiraviaraj RMFirst Published Jan 22, 2019, 1:54 PM IST
Highlights

கோடநாடு கொலை விவகாரத்தில் முதல்வருக்கும் தொடர்பு உண்டு எனக் கூறிய சயன் மனோஜுக்கு எதிராக உதகை நீதிமன்றம் ஜாமினை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கோடநாடு கொலை விவகாரத்தில் முதல்வருக்கும் தொடர்பு உண்டு எனக் கூறிய சயன் மனோஜுக்கு எதிராக உதகை நீதிமன்றம் ஜாமினை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொள்ளை நடைபெற்றது. அப்போது ஓம் பகதூர் என்கிற காவலாளி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இந்தனைத் தொடர்ந்து சயன் மனோ உள்ளிட்ட 10க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ கோடநாடு ஆவண வீடியோவை வெளியிட்டார். அப்போது சயன் மனோஜ் ஆகிய இருவரும் இந்த கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினர். சயன் மனோஜ் ஆகியோர்ர் மீது முதல்வர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப் படையில் தமிழக சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

 

ஓம்பகதூர் கொல்லப்பட்ட வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சயன் மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி போலீசார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமினை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு உதகை நீதிமன்றம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸிற்கு ஜனவரி 24ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 
 

click me!