மருத்துவப்படிப்பு கண்டுகொள்ளாத தமிழகம், கைகொடுக்கும் பினராயி விஜயன்...கல்விக்கடனுக்கு துணை நிற்கும் கேரள அரசு

First Published Sep 2, 2017, 9:35 PM IST
Highlights
kerala cm binarayee help medical students


கேரளாவில் மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்காக, ரூ. 6 லட்சம் வங்கிக்கடனுக்கான உத்தரவாதத்தை அரசே அளிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பு படிக்க இடம் கிடைத்தும் பணம் செலுத்த முடியாமல் இருக்கும் மாணவர்களின் மருத்துவர் கனவு கருகிவிடாமல், மாநில அரசு காப்பாற்றியுள்ளது.

கடந்த மாதம் 28-ந்தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் மாணவர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கலாம். அதில், ரூ.6 லட்சத்தை வங்கி உத்தரவாதத்துடன் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த உத்தரவு கேரளாவில் தனியார் மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் வங்கி உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறதே என மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட்டனர்.

இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் பேரில்,  மாநில தலைமைச் செயலாளர் கே.எம். ஆபிரஹாம், வங்கி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பின் மாணவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை அரசே வங்கியில் உத்தரவாதத்தை வழங்கும் என அரசு அறிவித்தது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வௌியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது-

உச்ச நீதிமன்ற உத்தரவை நினைத்து பெற்றோர்களும், மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். அரசு மாணவர்களின் நலனுக்காக  அனைத்து சாதகமான அம்சங்களையும் செய்யும். மாணவர்களுடனும், அவர்களின் குடும்பத்தினருடன் அரசு எப்போதும் துணை நிற்கும்.

கல்விக்கடன் கேட்கும் மாணவர்களிடம் சொத்துக்கள் ஏதும் ஈடாக கேட்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு சொத்துக்கள் ஈடு(கொலாட்டரல் செக்யூரிட்டி) ஏதும் இல்லாமல் அரசே கடன் உத்தரவாதத்தை ரூ. 6 லட்சத்துக்கு, 6 மாதங்களுக்கு வழங்கும்.

மாணவர்களின் உறவினர்கள், அல்லது பாதுகாவலர்கள் தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்தால் போதுமானது. செப்டம்பர் 5-ந்ேததியில் இருந்து இந்த கடன் வழங்கும் பணி தொடரும். மாணவர்கள் தங்களின் கல்லூரி அனுமதிக் கடிதத்துடன் வங்கிகளை அனுகி கடன் பெறலாம். . இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் முயற்சி....

முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ ஏழைமாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், அவர்களால் ரூ.6 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் இல்லாமல் படிக்க சிரமப்படுகிறார்கள். அவர்கள் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியிருந்தார்.

இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வௌியிட்டு, நீதிமன்றத்திலும் அரசின் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வங்கிக் கட்டணம் இல்லை

எஸ்.சி., எஸ்.டி, பிரிவு மாணவர்கள், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர், முந்திரி தொழில், ைகத்தரி போன்ற பாரம்பரிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கு வங்கி செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது

click me!