2021ல் மட்டுமல்ல... 2071-லும் அதிமுக ஆட்சிதான்... தமிழக அமைச்சர் தாறுமாறு கணிப்பு..!

Published : Oct 17, 2020, 08:56 PM IST
2021ல் மட்டுமல்ல... 2071-லும் அதிமுக ஆட்சிதான்... தமிழக அமைச்சர் தாறுமாறு கணிப்பு..!

சுருக்கம்

மு.க.ஸ்டாலின் ஒரு கத்துக்குட்டி. இப்போதுதான் தேர்தலை அவர் சந்திக்க வருகிறார். எனவே திமுகவைப் பற்றி அதிமுகவினர் கவலைப்படத் தேவையில்லை.  

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக தொடங்கி 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு இன்று 49வது பிறந்தநாள். ஒவ்வோர் ஆண்டும் அதிமுகவுக்கு வயது கூட கூட இளமையாகிக் கொண்டிருக்கிறது.

 
அடுத்த ஆண்டு அதிமுகவுக்கு பொன்விழா ஆண்டு. அப்போது அதிமுக ஆட்சிதான் நடக்கும். சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க நம்மைவிட மக்களே ஆர்வமாக உள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்ற மன நிலையில் வாக்காளர்கள் உள்ளார்கள். பொன்விழா ஆண்டிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான் இருக்க வேண்டும் என்ற லட்சிய சபதத்தை நாம் ஏற்க வேண்டும். தமிழகத்தில் அதிமுகவை தவிர ‌ வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க ‌அருகதை இல்லை.


கருணாநிதி இருந்தபோதே 10 தேர்தலை சந்தித்து 7ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் கைக்கு இன்றுதான் கட்சி வந்துள்ளது. மு.க.ஸ்டாலின் ஒரு கத்துக்குட்டி. இப்போதுதான் தேர்தலை அவர் சந்திக்க வருகிறார். எனவே திமுகவைப் பற்றி அதிமுகவினர் கவலைப்படத் தேவையில்லை. அதிமுகவை வெல்ல எந்த சக்தியும் இல்லை” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?