கலைஞரின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை முக்கிய அறவிப்பு..!

 
Published : Jul 28, 2018, 07:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
கலைஞரின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை முக்கிய அறவிப்பு..!

சுருக்கம்

kaveri hospital announced the health report of karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து குமரி முதல் டெல்லி வரை  உள்ள அனைத்து மாநில அரசியல் தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கலைஞரின் உடல் நலிவடைந்து உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியாகி இருந்தது. அதன் பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக தொண்டர்கள் முதல், அரசியல் தலைவர்கள் நலம் விசாரிக்க படை எடுத்து செல்ல ஆரம்பித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஒன்றரை மணி அளவில், காவேரி மருத்துவமனைக்கு கலைஞரை அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு உயிர் காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை கலைஞரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில்,

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு, அவருடைய  ரத்த அழுத்தம் சீராக உள்ளதா  என கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான அனைத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மற்றொரு புறம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில்  பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், அதனை  யாரும் நம்ப வேண்டாம்  என திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!