திருப்பும் பக்கமெல்லாம் மரணஅடி... கறுப்பர் கூட்டத்திற்கு அடுத்த ஆப்புக்கு பரிந்துரை..!

Published : Jul 20, 2020, 03:55 PM IST
திருப்பும் பக்கமெல்லாம் மரணஅடி... கறுப்பர் கூட்டத்திற்கு அடுத்த ஆப்புக்கு பரிந்துரை..!

சுருக்கம்

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து மத  கடவுள்களையும், புராணங்களையும் இழிவு படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி வீடியோக்கள் வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் 5 பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில்  சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்பட்டாலும், இன்னும் பல சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சேனலில் இருப்பதால் முற்றிலுமாக அவற்றை தடை செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்வதற்கு பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் சேனல் வீடியோ வெளியிட்டுள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த சேனலை முடக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி
அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?