மலிவான விளம்பரத்துக்காக கோஷம் போட்டு வேஷம் போடும் பாஜக.. முற்றும் நெருக்கடியால் கோர்ட் சென்ற சுரேந்திரன்..!

By vinoth kumarFirst Published Jul 20, 2020, 5:14 PM IST
Highlights

அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்துக்காக பாஜக என் மீது புகார் அளித்துள்ளது என கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்துக்காக பாஜக என் மீது புகார் அளித்துள்ளது என கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து,கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து மத  கடவுள்களையும், புராணங்களையும் இழிவு படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி வீடியோக்கள் வெளியிட்டதாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் 5 பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில்  சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்பட்டாலும், இன்னும் பல சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சேனலில் இருப்பதால் முற்றிலுமாக அவற்றை தடை செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்வதற்கு பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இந்நிலையில், சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசியல் ஆதாயத்திற்காகவும், மலிவான விளம்பரத்திற்காகாகவும் தன் மீது பாஜக புகார் அளித்துள்ளது. கந்த சஷ்டி கவசம் குறித்த தன் பதிவு மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் நான் பதிவிடவில்லை. அந்த பதிவும் நீக்கப்பட்டுவிட்டது. புதுச்சேரியில் சரண்டைந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு என்பதால் சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளேன் என சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ளது.

click me!