கருப்பர் கூட்ட தலைவனும் திமுக ஐடி விங்கும்.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி புகைப்பட ஆதாரங்கள்..!

By Selva KathirFirst Published Jul 18, 2020, 11:28 AM IST
Highlights

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து இந்துக்களின் மனதை புண்டுபத்திய கருப்பர் கூட்டத்தின் தலைவன் செந்தில் வாசன் தொடர்ச்சியாக திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருப்பதுடன், அக்கட்சியின் ஐடி விங் செயலாளர் தியாகராஜன் இருக்கும் புகைப்படத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து இந்துக்களின் மனதை புண்டுபத்திய கருப்பர் கூட்டத்தின் தலைவன் செந்தில் வாசன் தொடர்ச்சியாக திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருப்பதுடன், அக்கட்சியின் ஐடி விங் செயலாளர் தியாகராஜன் இருக்கும் புகைப்படத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக ஆதரவாளர்கள் இருப்பதாகவும், விசிக பிரமுகர்கள் இருப்பதாகவும் தொடக்கம் முதலே பாஜக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் திமுக கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்றும் தொடர்ச்சியாகவே கேள்வி எழுப்பப்பட்ட வருகிறது. பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியவர்களை உடனடியாக கண்டித்த ஸ்டாலின் பல கோடி இந்துக்களின் முப்பாட்டனான முருகனை அவமதித்தவர்களுக்கு எதிராக ஏன் எதுவும் கூறவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை நடத்தி வரும் செந்தில் தாசனை இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். இந்த செந்தில் வாசன் என்பவன் இணையதளங்களில் தொடர்ச்சியாக திமுகவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்ததும், திமுக ஐடி விங்க் செயலாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் செந்தில் வாசன் பல முறை திமுக ஐடி விங் செயலாளர் பழனிவேல் தியாகராஜனின் புகைப்படங்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளான்.

திமுக கருத்துகளின் மீது ஈடுபாடு என்றால் அந்த கட்சியின் தலைமை வெளியிடும் அறிக்கைகளை பதிவிடலாம், ஆனால் இவன் ஏன் திமுக ஐடி விங்க் செயலாளர் தியாகராஜனின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் ஓட்டல் ஒன்றில் செந்தில் வாசன் உள்ளிட்ட பலர் சாப்பிடுவது போன்றும் அங்கு பழனிவேல் தியாகராஜன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு குழுப்புகைப்படத்திலும் பழனிவேல் தியாகராஜனுடன், செந்தில் தாசன் இருப்பது போன்ற புகைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி விவகாரத்தில் கந்த சஷ்டி எனும் பெயரை கூட தெரிவிக்காமல் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையை கூட செந்தில் வாசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளான். இதே போல் திமுகவின் ஆதரவாளரான டான் அசோக்கின் பதிவுகளை தொடர்ச்சியாக செந்தில் வாசன் ஷேர் செய்துள்ளான். இதன் மூலம் திமுகவின் சமூக வலைதள பிரபலங்களுடன் செந்தில் வாசன் நெருக்கமாக இருந்துள்ளது தெரியவருகிறது என்கிற புகார் எழுந்துள்ளது. இதுநாள் வரை இந்த விஷயத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்று திமுக கூறி வந்தாலும் செந்தில் வாசனுக்கும் திமுக ஐடி விங்க் தியாகராஜனுக்கும் என்ன தொடர்பு என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

click me!