நாடே கொந்தளிக்குது என்ன நடக்குமோன்னு... ஆனால் மோடிக்கு கருப்பு கொடி காட்ட ஆர்டர் கொடுத்து உள்ளார் கருணாஸ்..! நாளை கன்னியாகுமரியில்..!

By ezhil mozhiFirst Published Feb 27, 2019, 3:54 PM IST
Highlights

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக இரு நாடுகளுமே அடுத்து என்ன செய்யலாம் என்ற அதிவேக ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக இரு நாடுகளுமே அடுத்து என்ன செய்யலாம் என்ற அதிவேக ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்ளே புகுந்து அமெரிக்கா தாக்கியது போலவே இந்தியாவும் உள்ளே புகுந்து தாக்கும், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை அரை நூற்றாண்டிற்கு பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

எல்லையில் பதற்றம் நீட்டிப்பதால் பஞ்சாப் அமிர்தசரஸ், சண்டிகர், சிம்லா, தர்மசாலா, குலு விமான நிலையங்களும்,லூதினா,ஆதம்பூர்,பதான்கோட்,டேராடூன், பான்ட்நகர் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் எச்சரிக்கையை திரும்ப பெற்ற மத்திய அரசு விமான சேவையை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் பிரிவினவாத தலைவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில், நாளை மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு,கருப்புக்கொடி காட்டப்படும் என தெரிவித்து உள்ளார். 

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூடாததே மோடிக்கு கருப்புக்கொடி காட்ட காரணம் எனவும் கருணாஸ் தெரிவித்துள்ளததாக செய்திகள் வெளியாகி உள்ளன

click me!