’இவரு எந்தக் கட்சியிலதான் இருக்காராம்?’ திடீரென மு.க. ஸ்டாலினை சந்தித்த கருணாஸ்

Published : Oct 12, 2018, 10:54 AM IST
’இவரு எந்தக் கட்சியிலதான் இருக்காராம்?’  திடீரென மு.க. ஸ்டாலினை சந்தித்த கருணாஸ்

சுருக்கம்

முக்குலத்தோர் படைத்தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கருணாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று திடீரென சந்தித்தார்.

இரண்டு நாள் மருத்துவமனை ரெஸ்டுக்குப் பின்னர் மீண்டும் பரபரப்பைக் கிளப்பும் உத்தேசத்துடன் சற்றுமுன்னர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார் முக்குலத்தோர் படைத்தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்.

நெல்லை போலீஸாரின் கைதுக்குப் பயந்து சூர்யா மருத்துவமனையில் நெஞ்சு வலிக்கு சிகிச்சை எடுத்து வந்த கருணாஸ் நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

டிஸ்சார்ஜுக்குப் பின்னர் ஒருவேளை ஏதாவது ஒரு வழக்கில் தன்னைக் கைது செய்துவிடுவார்களோ என்று பயந்த கருணாஸ் தனது வீட்டில் தங்காமல் வெளியே ரகசிய இடத்தில் தங்கிவிட்டு, இன்று காலை திடீரென மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சந்திப்புக்குப்பின் நிருபர்களிடம், ‘ என்னை மு.க.ஸ்டாலின் இயக்குவதாக சொலவராது அபாண்டமானது. என்னை ஸ்டாலினோ, டிடிவி தினகரனோ இயக்கவில்லை.

எனக்கு எதிராக அநீதி நடக்கிறது. அதற்கு எதிராகக் குரல்கொடுக்கும்படி ஸ்டாலினை கேட்டுக்கொள்ளவே வந்தேன். விரைவில் விரிவாகப் பேசுவோம்’ என்றபடி எஸ்கேப் ஆனார்.

மேலும் பேசிய சபாநாயகர் என்பவர் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை. இவ்வாறு கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!