
இதை செய்தது கலைஞர் தானே..! துக்கத்தில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்...!
எப்போதுமே கலைஞர் என்றால் ஆசிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.அப்படி என்ன ஒரு பந்தம் என்ற யோசனையா ..?
கலைஞர் ஒரு முறை திருவாரூருக்கு சென்றிருந்த பொழுது அவர் அக்கா குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு தாசில்தார் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.
இவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்த இவர், நடந்தவற்றை கலைஞரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்
ஜீப்பில் அதிகார பலத்துடன், அரசு வேலையில் இருந்த தாசில்தார் எங்கே...இவர் இறந்த உடன் அவருக்கு ஏற்பட்ட நிலைமைதான் என்ன ..?
அவரை அடக்கம் செய்யக் கூட பணமின்றி தவித்ததை கேட்டறிந்து கலைஞர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
அரசு ஊழியர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படுகிறதே என நினைத்து, உடனடியாக தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என்று விவாதித்தார். சென்னை திரும்பியவுடன் ஒரு ஆணை பிறப்பித்தார். ஆணை பிறப்பித்த நாள் ( நாள் :01-01-1974).
என்ன ஆணை தெரியுமா..?
அரசு ஊழியர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்து விட்டால் உடன் ரூ 10,000 கொடுப்பது என்றும் அதற்காக மாதம் ரூ 10 பிடித்தம் செய்து கொள்ளலாம் என்பது ஆணை. இது வரை எவ்வளவு பிடித்தம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் எப்போது இறந்தாலும் இத்தொகை தரப்பட வேண்டும். இந்த ஆணை அமுலுக்கு வந்தது 01/01/974 முதல்.
அந்த ஊழியரின் மனைவி முதல்வராக இருந்த கலைஞரை சந்தித்து முறையிட்டார். முதல்வர் கலைஞர் அந்த ஏழை குடும்பத்தின் நிலைமையைப் புரிந்து கொண்டு துறை செயலாளரை கூப்பிட்டு சொன்னார். அந்த இறந்த உழியர் 9 நாட்கள் பணி புரிந்திருக்கிறார்.
அவரது 9 நாள் சம்பளத்தில் இந்த ரூ 10 ஐ கழித்துக் கொண்டு ரூ 10,000 கொடுக்கச் சொன்னார்
இவ்வளவு சம்பவமும் அந்த ஊழியர் இறந்து 24 மணி நேரத்தில் நடந்து முடிந்து இறந்த ஊழியரின் மனைவியிடம் ரூ 10,000 அரசு நிதி வழங்கப்பட்டது
அவரது இந்த சாதுர்யமான நிர்வாகத் திறனையும் மின்னல் போல் செயல்படும் வேகத்தையும் பார்த்து அன்றைக்கு தலைமைச் செயலகமே வியந்து போனது. அது தான் இன்று FBF (family benefit fund ) .
இப்படியெல்லாம் அற்புதமான திட்டத்தை தன்னுடைய சாதுர்த்தியமான திறமையால் கொண்டு வந்தவர் தான் கலைஞர்.