சீரியல் நாயகியின் காதலனான கார்த்தி சிதம்பரம்..! மாமியார், மருமகள் சண்டையைப் பார்க்க தயாராகும் மக்கள்..!

Published : Apr 15, 2019, 11:28 AM IST
சீரியல் நாயகியின் காதலனான கார்த்தி சிதம்பரம்..! மாமியார், மருமகள் சண்டையைப் பார்க்க தயாராகும் மக்கள்..!

சுருக்கம்

வளர்ச்சி திட்டங்களை முன் வைத்து அனைவரும் பிரசாரம் செய்து வரும் நிலையில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சீரியல் விவகாரத்தை முன்னிருத்தி அசரடித்து வருகிறார். 

வளர்ச்சி திட்டங்களை முன் வைத்து அனைவரும் பிரசாரம் செய்து வரும் நிலையில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சீரியல் விவகாரத்தை முன்னிருத்தி அசரடித்து வருகிறார். 

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பிரச்சாரத் துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம்  பெண்களிடம் சில டிவி சீரியல்களைக் கூறி இதில் எந்த சீரியல் உங்களுக்கு ரெம்பப் பிடிக்கும் எனக் கேட்கிறார்? 

செம்பருத்தி சீரியலில் மாமியார் சண்டையில் நீங்கள் யார் பக்கம்? பார்வதி பக்கமா? வனஜா பக்கமா? நான் ஏன் அடிக்கடி செம்பருத்தி சீரியலை சொல்கிறேன் தெரியுமா? அதில் வரும் கதாநாயகன் பெயரும் கார்த்தி தான். அந்த சீரியல் பார்க்கும்போதெல்லாம் என்னை உங்களுக்கு ஞாபகம் வரும். அப்போதுதான் என்னை மறக்க மாட்டீர்கள் என்று கூறி பிரச்சாரத்தை முடிக்கிறார். இதை கேட்டு பெண்கள் அனைவரும் ரசித்துக் கேட்கின்றனர். அடுத்து வனஜா ரொம்ப கொடுமைக்காரி. சீரியலில் வரும் கொடுமைக்காரியை உங்களுக்கும் பிடிக்கவில்லையே... அப்புறம் எப்படி உண்மையான கொடுமைக்காரராக இருக்கும் மோடியை உங்களுக்குப் பிடிக்கும். 

ரூ.100 ஆக இருந்த கேபிள் டிவி கட்டணத்தை ரூ.400 ஆக அதிகரித்ததால் சிரமப்படுகிறீர்கள். அதைக் குறைத்து சாயங்காலம் சவுகர்யமாக மாமியார், மருமகள் சண்டையைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன். எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்கிறார். மற்ற விஷயங்களை குறைவாக பேசும் கார்த்தி சீரியலைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார். இவரது சீரியல் பேச்சை கேட்கும் பொதுமக்கள், இவர் தனக்காக பிரச்சாரம் செய்கிறாரா? இல்லை செம்பருத்தி சீரியலுக்காக பிரச்சாரம் செய்கிறாரா? எனக்கூறி சிரிக்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!