மக்களவை தேர்தல் முன்பே ஆட்சி கவிழ்கிறது..? நடுக்கத்தில் முதல்வர்..!

Published : Mar 04, 2019, 12:32 PM ISTUpdated : Mar 04, 2019, 12:46 PM IST
மக்களவை தேர்தல் முன்பே ஆட்சி கவிழ்கிறது..?   நடுக்கத்தில் முதல்வர்..!

சுருக்கம்

கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் ஆட்சி கவிழும் நிலை உருவாகி இருக்கிறது. ஆகையால், மக்களவை தேர்தலுடன் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 224 இடங்களில் பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 82, மஜத கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன. அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவர் பதவி விலகினார். இதனால் மஜத கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு இருந்து வருகிறது. இதனை சரியாக பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. ஆனால் இது பலன் அளிக்காமல் போய்விட்டது. இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் பாஜக பேரம் பேசி வருவதாக வெளியான தகவலால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அவர் அளித்துள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அவர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் குமராசாமியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!