ரஜினி, கமலைத் தெறிக்கவிட்ட கனிமொழி... பதிலுக்கு கனிமொழியை பங்கம் செய்த ரஜினி, கமல் நாயகி...!

Published : Dec 22, 2020, 09:29 PM IST
ரஜினி, கமலைத் தெறிக்கவிட்ட கனிமொழி... பதிலுக்கு கனிமொழியை  பங்கம் செய்த ரஜினி, கமல் நாயகி...!

சுருக்கம்

ரஜினி, கமலுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை மக்கள் வீணடிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்த திமுக எம்.பி கனிமொழிக்கு நடிகை ஸ்ரீபிரியா பதில் அளித்துள்ளார்.  

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, “ரஜினி, கமலுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை. இனியும் ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தருவருமான நடிகை ஸ்ரீபிரியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “அன்புச்சகோதரி கனிமொழிக்கு… கமல்ஹாசன்‌ ரஜினிக்கு வாக்களித்து வாழ்க்கையை வீணாக்க மக்கள்‌ விரும்பவில்லை என்று அன்பு சகோதரி கனிமொழி  நெல்லையில்‌ பேட்டி அளித்ததாக தகவல்‌…
சகோதரி..! தாங்கள்‌ அரசியலில்‌ என்னை விட மூத்தவர்‌. இருப்பினும்‌ சில உண்மைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது… எம்‌ தலைவர்‌ நம்மவர்‌ மற்றும்‌ நண்பர்‌ ரஜினியைப்பற்றிய விமர்சனம்‌ அவர்கள்‌ திரைத்துறையை சார்ந்தவர்கள்‌ எனில்‌, உங்கள்‌ தந்தையார்‌,  மாறன்‌, அமிர்தம்‌, உதயநிதி, ஸ்டாலின்‌, செல்வம்‌ மற்றும்‌ சன் பிக்சர்ஸ் (யார்‌ பெயராவது விடுபட்டு இருந்தால்‌ மன்னிக்கவும்‌) என அனைவரும்‌ திரைத்துறையில்‌ ஈடுபட்டவர்கள்‌ என்பதை உங்களுக்கு எடுத்து சொல்லும்‌ துரதிர்ஷ்டம்‌ எனக்கு! இல்லை அவர்கள்‌ வயதை குறித்து உங்கள்‌ கருத்து என்றால்‌ அதற்கு, மேல்‌ குறிப்பிட்டுள்ள பெயர்கள்‌ சாலப்பொருந்தும்‌!

மக்களுக்கு மாற்றம்‌ தேவை; நல்ல ஆட்சியை கொண்டு வரவேண்டும்‌ என்று வருபவர்களை வரவேற்று போட்டியிடுங்கள்‌… மூத்த தலைவராக பல தலைமுறை அரசியலைக் கண்டு வென்ற உங்கள்‌ தந்தையார்‌ விரும்பி அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்‌ நம்மவர்‌, அந்த அரசியல்‌ மேதையின்‌ கணிப்பை கெளரவப்படுத்துங்கள்‌ தங்கையாரே….” என  நடிகை ஸ்ரீபிரியா கனிமொழிக்குத் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!