வாரிக் கொடுத்த தங்கை கனிமொழி... பணியைத் தொடங்கிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Feb 1, 2019, 11:13 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளியில் கட்டிடங்கள் கட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கியிருக்கிறார் கனிமொழி.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளியில் கட்டிடங்கள் கட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கியிருக்கிறார் கனிமொழி.

தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட தொகுதிக்கு மட்டுமே செலவு செய்வார்கள். ஆனால், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பவர்கள் மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் நலத் திட்டங்களை மேற்கொள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கலாம். கிராமங்களை எம்.பி.கள் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை கனிமொழி தேர்வு செய்தார்.

 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள கனிமொழி, அந்தத் தொகுதியின் மீது தனி கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ள கொளத்தூர் தொகுதியில் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட திட்டமிட்டப்பட்டன. 

இதற்கான நிதியை தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கனிமொழி ஒதுக்கித் தந்திருக்கிறார். இதனையடுத்து புதிய வகுப்பறை கட்டுமான பணிக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையின் கோரிக்கையை ஏற்று மேற்படிப்புக்கு உதவியாக மடிக்கணினி ஒன்றையும் வழங்கினார்.

click me!