ஆட்சியரா? ஆணையரா? அய்யோ பாவம்... கமலே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு..!

Asianet News Tamil  
Published : Oct 28, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
ஆட்சியரா? ஆணையரா? அய்யோ பாவம்... கமலே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு..!

சுருக்கம்

kamal thank commissioner instead of collector

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டதை பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் கமல் பார்வையிட்ட சில மணி நேரத்தில், கொசஸ்தலையாற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

 தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய ஆட்சியர் சுந்தரவல்லிக்கு நன்றி தெரிவித்து கமல் பதிவிட்ட டுவீட்டில், ஆட்சியர் சுந்தரவல்லி என்பதற்குப் பதிலாக ஆணையர் சுந்தரவல்லி என பதிவிட்டுவிட்டார்.

அவராகவே அந்த தவறை உணர்ந்தாரா? அல்லது யாரும் அவருக்கு அத்தவறை சுட்டிக்காட்டினார்களா? என்பது தெரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில் ஆணையர் என்பதை ஆட்சியர் என திருத்திவிட்டார்.

அவசரகதியில் ஆட்சியரை ஆணையர் என குறிப்பிட்டாரா? அல்லது நடவடிக்கை எடுப்பதாக கூறியது ஆட்சியரா, ஆணையரா  என்பது தெரியாமல்தான் பதிவிட்டாரா என்பதும் கேள்வியாக உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?