"நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான்" உருகவைக்கும் கமல் அறிக்கை...

 
Published : Mar 01, 2018, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
"நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான்" உருகவைக்கும் கமல் அறிக்கை...

சுருக்கம்

Kamal says Sridevi and me are like brother sister

நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான். நாங்கள் வெற்றி ஜோடி ஆன பிறகு பலரும் எங்களை கேட்காமலேயே ஒப்பந்தம் செய்தனர் என கூறியிருக்கிறார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:  அதில், கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு; திட்டத்தின் பட்டியலே கொள்கை என நினைக்கிறார்கள். கிராம மேம்பாடு என்பதே எங்கள் கொள்கை; அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டை போல் விவசாய மேம்பாடு என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்களை வைத்துள்ளோம்.

மக்கள் நலம், தமிழகத்தின் வளம்தான் கொள்கை என வைத்தால் எத்தனை எத்தனை திட்டம் வேண்டுமானாலும் போடலாம். கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பின்னுக்கு இழுக்க வேண்டாம். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது; அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது; இது உடம்பு கேட்கும் வியாதி. 

குடிப்பதைக் குறைக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள். 

நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான். நாங்கள் வெற்றி ஜோடி ஆன பிறகு பலரும் எங்களை கேட்காமலேயே ஒப்பந்தம் செய்தவனர் என குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!