கூவுனதுக்கான அலவன்ஸை எடப்பாடிகிட்ட வாங்கிக்குங்க: பண்ருட்டியாரை ரொட்டியாக்கும் கமல் ரசிகர்கள்

Asianet News Tamil  
Published : Nov 06, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
கூவுனதுக்கான அலவன்ஸை எடப்பாடிகிட்ட வாங்கிக்குங்க: பண்ருட்டியாரை ரொட்டியாக்கும் கமல் ரசிகர்கள்

சுருக்கம்

Kamal is doing his best to get the Tamil peoples good wishes for good leadership

நல்ல தலைவனுக்காக தவித்திருக்கும் தமிழக மக்களின் அபிமானத்தைப் பெற பகீரதப் பிரயத்னம் செய்து கொண்டிருக்கிறார் கமல். ‘நான் கட்சி துவங்கி, அரசியலுக்கு வருவது உறுதி’ என்று நேற்று நெத்தியடியாக அவர் அறிவித்திருக்கும் நிலையில் மாஜி அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் அவரை வம்புக்கிழுத்து வகையாய் மாட்டிக் கொண்டிருக்கிறார். 

பண்ருட்டியில் பேசிய ராமச்சந்திரன் “உடல்நிலை சரியில்லாததால் ஆறு மாதங்களாக அமைதியாக இருந்தேன். இப்போது நான் ஓ.கே. சசிகலாவுக்கு  தண்டனை உறுதியானதும், கட்சியின் மூத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது குறித்து அறிவுரை வழங்கியிருக்க வேண்டும்.

அதைவிட்டு தி.மு.க. எனும் இயக்கத்தை தன் குடும்பச் சொத்தாக கருணாநிதி வைத்திருப்பது போல் அ.தி.மு.க.வையும் குடும்பச் சொத்தாக மாற்ற முயன்று இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.” என்றவர்! அடுத்து,
“எம்.ஜி.ஆர். - என்.டி.ஆர். ஆகியோர் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். எம்.ஜி.ஆர். போல் கமல்ஹாசன் அரசியலில் பிரகாசிக்க முடியாது.” என்று சொல்ல, அவருடன் இருந்த அ.தி.மு.க.வினரோ ‘ஆமாங்க கமல்ஹாசனெல்லாம் அரசியல்ல தேற மாட்டாரு’ என்று பக்கவாத்தியம் வாசித்தனர். 

இந்த விவகாரம் அப்படியே கமல் தரப்பின் காதுகளுக்குப் போக, அவரது ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். ஆளாளுக்கு இணையத்தில் பண்ருட்டியாரை வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சில ஹைலைட் விமர்சனங்கள்...

*    பண்ருட்டி சார்! தெற்க பார்க்க பேட்டிக்கு மைக் இருக்கிறப்ப, நீங்க ஏன் வடகிழக்கா பார்த்து பேசுறீங்க?
    -    லிட்டில் ஆனந்த்.

*    நீங்க நுழைஞ்ச எந்த கட்சிய்யா விளங்குச்சு? தே.மு.தி.க.வ தெருவுல இழுத்துவிட்ட பண்ருட்டி ஆமைச்சந்திரன் நீங்க தானே?
        -    தெனாலி கிருஷ்ணமூர்த்தி

*    பெரியவரே, வயசு பசங்க அரசியல் பண்ணிட்டு இருக்குற இடத்துல நீங்க ஏன் கண்ணாடிய தடவிட்டு இருக்கீங்க? அப்டி ஓரமா போயி குந்துங்க.
        -     ஆனந்த்ராஜ்

*    பண்ருட்டி ராமு நீங்க இன்னமும் இங்கேதான் சுத்திட்டு இருக்கீங்களா? சொல்லவேயில்ல! கூவுனதுக்கான அலவன்ஸை எடப்பாடிகிட்ட கரீக்டா வாங்கிக்குங்க.
        -    கமல் பிரகாஷ்.

....இப்படியெல்லாம் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். 
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?!
 

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!