
நடிகர் கமலஹாசனை பொறுத்தவரை எந்த ஒரு பொறுப்புணர்ச்சியோ அக்கறையோ தமிழக மக்கள் மீது கிடையாது எனவும் தனக்கொரு ஆபத்து வந்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறும் நாட்டுப்பற்று உடையவர் அவர் எனவும் அதிமுகவின் ஆவடி குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சென்னை ஆர்,கே,நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 21 ஆம் தேதி அங்கு தோதல் நடத்தப்பட்டது. அப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு தலா 6000 ரூபாய் கொடுத்ததாக புகார் எழுந்ததது.
இதே போல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டுக்கு 10000 ரூபாய் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இறுதியில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து நடிகர் கட்டுரை ஒன்றில் விமர்சனம் செய்திருந்தார்.
அதில், ஓட்டு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் விலை பேசிய சுயேட்சையை வாக்காளர்கள் ஜெயிக்க வைத்துள்ளனர் எனவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை திருடன் எனவும் விமர்சித்திருந்தார்.
மேலும் ஆர்.கே.நகர் மக்கள் ரூ. 20 டோக்கனுக்கு விலை போனதாகவும் திருடனிடம் பிச்சை எடுப்பது கேவலமானது எனவும் சாடியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து அதிமுகவின் ஆவடி குமார் பேசுகையில், நடிகர் கமலஹாசனை பொறுத்தவரை எந்த ஒரு பொறுப்புணர்ச்சியோ அக்கறையோ தமிழக மக்கள் மீது கிடையாது எனவும் தனக்கொரு ஆபத்து வந்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறும் நாட்டுப்பற்று உடையவர் அவர் எனவும் தெரிவித்தார்.
திடீரென எதையாவது கூறிவிட்டு திடீரென தலைமறைவாகி விடுவார் எனவும் தனக்கும் தனது திரைப்படத்திற்கும் பாதிப்பு வந்துவிட்டால் அது தமிழ்நாட்டுக்கு வந்த பாதிப்பு என நினைக்கக்கூடியவர் எனவும் குறிப்பிட்டார்.
நடிகர்கள் விளம்பரத்திற்காக அரசியலுக்கு வருகிறார்கள் எனவும் மக்களின் இயல்பு நிலை புரியாதவர்கள் எனவும் சாடினார்.
படத்தின் மவுசு குறைந்ததால் அரசியலுக்கு வந்துவிடலாம் என நினைக்கின்றனர் எனவும் அரசியலுக்கு வந்த நடிகர்களெல்லாம் வெற்றி பெற்றதில்லை எனவும் குறிப்பிட்டார்.