அன்றே சொன்ன கமல்... முதல்வரின் முத்தான அறிவிப்புக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்காம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 29, 2021, 07:10 PM IST
அன்றே சொன்ன கமல்... முதல்வரின் முத்தான அறிவிப்புக்கு பின்னால் இப்படி  ஒரு சம்பவம் இருக்காம்...!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கொரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதை கண்டு வாடி, அதற்கு தீர்வாக என்ன செய்யலாம் என அரசுக்கு தான் கடந்த 20ம் தேதி வழங்கிய ஆலோசனையை செயல்படுத்தியுள்ளதாக நன்றி தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக சேர்க்கப்படும் என்றும், அவர்கள் 18 வயதை அடையும் போது அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிக்கான செலவையும் அரசே ஏற்கும் என்றும், கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உறவினர்களுடன் வசித்து வரும் குழந்தைகளுக்கு அவர்கள் 18 வயது அடையும் வரை மாதம்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்றும் அரசு விடுதி, இல்லங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களில் இந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கொரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதை கண்டு வாடி, அதற்கு தீர்வாக என்ன செய்யலாம் என அரசுக்கு தான் கடந்த 20ம் தேதி வழங்கிய ஆலோசனையை செயல்படுத்தியுள்ளதாக நன்றி தெரிவித்துள்ளார். 

மே மாதம் 20ம் தேதி கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ஆந்திராவைப் போல் நிவாரண உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

தற்போது அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள கமல் ஹாசன், கடந்த 20-ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் காக்க  ‘கண்மணிகளைக் காப்போம்’ என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாகக் கோரிக்கை வைத்திருந்தேன்.இக்குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!