தமிழக மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் சர்ச்சைப் பேச்சு ! கமல்ஹாசன் கடும் கண்டனம் !!

Published : May 08, 2019, 08:36 AM IST
தமிழக மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் சர்ச்சைப் பேச்சு ! கமல்ஹாசன் கடும் கண்டனம் !!

சுருக்கம்

தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் டெல்லியில் படிப்பதால் டெல்லியில்  உள்ள மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கேஜ்ரிவால் தனது தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் டெல்லியில் படிப்பதால், டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன” எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கெஜ்ரிவால்  டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியிருப்பார். கேஜ்ரிவாலிடம் இது குறித்து நான் கேட்க முடியாது. 

அவர் சொன்னது, ‘தமிழகத்திலிருந்து வரும் மாணவர்களுக்கெல்லாம் சீட் கிடைக்கும்போது, டெல்லி மாணவர்களுக்கு சீட் கிடைக்க மறுக்கிறது, 
அதற்கு காரணம் தனி மாநில அந்தஸ்து இல்லை’ என்பதாகத்தான் இருக்கும். மற்றபடி தேசிய ஒருமைப்பாட்டை விரும்பும் யாரும் அப்படி பேசியிருக்க மாட்டார்கள். மற்றபடி அவ்வாறு அவர் பேசியிருந்தால் அது தவறுதான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!