என் வழி தனி வழி !! உச்சநீதிமன்றத்தின் கதவை லேட்டாக தட்டிய பிரபு !!

Published : May 08, 2019, 09:17 PM IST
என் வழி தனி வழி !! உச்சநீதிமன்றத்தின் கதவை லேட்டாக தட்டிய பிரபு !!

சுருக்கம்

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி மூன்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றத்தில் 2 எம்எல்ஏக்கள் தடை வாங்கிய நிலையில் மூன்றாவது எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபு இன்று உச்சநீதிமன்றத்தில் தடை கேட்டு மனுத்தாக்கல்  செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகிய மூன்று அதிமுக எம்எல்ஏக்கள், தினகரனுக்கு ஆதரவாக செய்லபட்டதாக கூறி அவர்கள் மூவருக்கும் சபாநாயகர் தப்ல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து ரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் அனுப்பிய நோட்சுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது எம்.எல்.ஏ. பிரபு இன்று  மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரபு தாக்கல் செய்துள்ள மனுவில், “என் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


 
சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. மேலும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே என் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

இம்மனு விசாரணைக்கு வரும்போது மற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள மனுவுடன் இணைக்கப்பட்டுவிடும். அதனால் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவானது, மூன்றாவது எம்.எல்.ஏ.வான பிரபுவுக்கும் பொருந்தக்கூடியது ஆகிவிடும் என கூறப்படுகிறது..

இத்தனை நாளும் தனியாக , சைலண்டாக இருந்த கள்ளக்குறிச்சி பிரபு தற்போது மீண்டும் தினகரனுன் இணைந்திருப்பது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!