தெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு.! அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..!

By T BalamurukanFirst Published Oct 31, 2020, 9:44 PM IST
Highlights

யானை தாக்கி யானை பாகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர்.சரவணன்.தனது சொந்த நிதியில் அந்த குடும்பத்திற்கு 1லட்சம் ரூபாய் வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அங்கு தெய்வானை என்ற யானை கடந்த 2015ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்த யானைக்கு வயது 14. யானை பாகன் காளிதாஸ் தெய்வானையை நன்கு பராமரித்து வந்தார்.தெய்வானையும் காளிதாஸ் சொல்லுவதை அப்படியே கேட்கும். இவர்களுக்குள் உறவு நன்றாகவே இருந்தது. தினந்தோறும் சரவண பொய்கையில் முருகபெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கு அபிசேகம் செய்வதற்கு இங்கு இருந்து தான் தண்ணீர் எடுத்து வரும் தெய்வானை.

முருகபெருமான் நகர் வலம் வரும் போது கூட தெய்வானை முன்னே போய்க் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு முருகபெருமானுக்கு சேவகம் செய்த தெய்வானை தன்னை பாராமரித்து வந்த காளிதாஸை தனது துதிக்கையால் அடித்து கொலை செய்து விட்டது. இதற்கு என்ன காரணம்... கொரோனா தொற்றால் கடந்த 6மாதங்களாக வெளியில் வராமல் யானை கொட்டத்தில் அடைத்து வைத்ததால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் கோயில் பட்டர்கள்.
காளிதாஸ் தெய்வானை யானையால் தாக்கப்பட்டதும் உடனடியாக கோயில் ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியல் உயிரிழந்தார்.அவரது குடும்பம் தற்போது சோகத்தில் உள்ளது. எனவே அந்த தொகுதி எம்எல்ஏ என்கிற முறையில் அவரது குடும்பத்திற்கு தனது சொந்த நிதியில் 1லட்சம் வழங்கியிருக்கிறார்.காளிதாஸ் மனைவி ரேவதிக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் எம்எல்ஏ டாக்டர் சரவணன்.

click me!