மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு... அரசு மருத்துவமனையில் அனுமதி..!

By vinoth kumarFirst Published Oct 12, 2020, 4:45 PM IST
Highlights

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனிடையே ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தமிழகம் வழக்கமான நிலைக்கு திரும்பியதால் அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தார். 

அவருக்கு சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார். அதில், தொற்று உறுதியானதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!