கொடைக்கானலில் சும்ம கெத்தா ஸ்டைலா... பொழுதைக் கழிக்கும் மு.க.ஸ்டாலின்..!

Published : Apr 19, 2021, 06:39 PM IST
கொடைக்கானலில் சும்ம கெத்தா ஸ்டைலா... பொழுதைக் கழிக்கும் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

 மு.க.ஸ்டாலின் ஆடு எப்படி வளர்கிறது, முயல் எப்படி மேய்கிறது என்பதை பார்க்க ஸ்டைலா போய் பொழுதைக் கழித்து வருகிறார் என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு ஓய்வெடுக்க மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அவர் குடும்பத்தினருடன் 2 தனி விமானங்கள் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தனது மனைவி, மகன், மருமகள், மகள் செந்தமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் என பலரும் அவருடன் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்து வருகின்றனர். 

கொடைக்கானல் மன்னவனூர் ஆட்டு பண்ணையை செம்மறி ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகியவற்றை சுற்றுலா வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குடும்பத்துடன் பார்வையிட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ஸ்டைலாக உடையணிந்து, கூலிங் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக காட்சி தரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பொதுமக்கள், தமிழகமே கோரோனாவால் தத்தளித்து வருகிறது.

ஆனால், எந்தக் கவலையும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் ஆடு எப்படி வளர்கிறது, முயல் எப்படி மேய்கிறது என்பதை பார்க்க ஸ்டைலா போய் பொழுதைக் கழித்து வருகிறார் என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!