
ஜெயலலிதா இறப்பும், கருணாநிதி செயல்படாமல் இருப்பதும் தமிழகத்திற்கு சோதனைக் காலம் தான் போல, என்னத்த சொல்றது? நம்ம ஜல்லிக்கட்டு தமிழச்சி ஜூலி இருக்கங்கல்ல அவங்களும் புதுசா ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறாங்களாம்.
சினிமாவில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது புதிது இல்லை தான். ஆனால் தற்போது சற்றும் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கிறார்கள். தற்போது இருக்கும் சூழலில் தமன்னாவும், யோகிபாபுவும் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை, அட ஆமாங்க, பலவருஷமா எதிர்பார்த்து காத்துக் கிடந்த போதும் வராத ரஜினி இன்னும் இந்தா, அந்தா என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தாறுமாறா தரணி புல்லா ரீச் ஆன நம்ம ஜூலி, முதல்ல பிக்பாஸ், அப்றமா தொலைக்காட்சி தொகுப்பாளினி, இப்போ கோலிவுட் ஹீரோயினி என அடுத்ததாக அரசியலில் அதகளம் பண்ண அரசியல் கட்சி தொடங்கப்போராராம் .
இதுகுறித்து, ஜூலி தான் அரசியல் கட்சி துவங்குவதாக கூறி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஜூலி கட்சி துவங்குவார் என்று சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் வியப்பு கலந்த அதிர்ச்சி கலக்கத்தில் உள்ளார்கள்.