ரத்தப் புற்று நோயால் உயிருக்குப் போராடும் மாணவர் !! காப்பாற்ற மனு அளித்த 2 நிமிடங்களில் 20 லட்சம் உதவிய அதிரடி முதலமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Jun 7, 2019, 8:02 AM IST
Highlights

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் ரத்தப் புற்று நோயால் உயிருக்கு போராடும் தங்களது நண்பருக்கு உதவி செய்ய வேண்டும் என கல்லூரி மாணவர்கள் சிலர் ஆந்திய முதலமைச்சர் ஜெகன் மோகனை சந்தித்து மனு அளித்த ஒரு சில நிமிடங்களில், விசாரித்து அவருக்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.
 

ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்போற்றுக் கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்  பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கு பொது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்வு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்ற ஜெகன் மோகன், பின்னர், விமான நிலையத்துக்கு வரும்போது, வெளியில் சில கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக காரை விட்டு இறங்கி மாணவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது, ‘ எங்கள் நண்பன் நீரஜ்ஜுக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது. 

அதனால், அவன் தற்போது கல்லூரிக்கு வருவதில்லை. ஹைதராபாத்தில் உள்ள ஒரு கேன்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறான். நீரஜ்ஜின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அதனால், அவனது மருத்துவச் செலவுகளை அவர்களால் செய்ய முடியவில்லை. அரசு ஏதேனும் உதவி செய்தால், எங்கள் நண்பன் பிழைத்துக்கொள்வான் என கூறியுள்ளனர்.

இதையடுத்து ஜெகன் மோகன், விசாகபட்டினம் மாவட்ட ஆட்சியரை அழைத்து அந்த மாணவருக்கு மருத்துவ உதவிகள் செய்ய உத்தரவிட்டார். மேலும் நீரஜ்ஜுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

இது குறித்து நீரஜ்ஜுன் நண்பர்கள் பேசும்போது, நாங்க முதலமைச்சர் எங்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டார் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர் காரில் இருந்து இறங்கிவந்து எங்களின் குறை கேட்டது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 

அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

click me!