சசியின் பினாமி சொத்துக்கள் எங்கே..? - விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி...!

Asianet News Tamil  
Published : Nov 13, 2017, 07:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சசியின் பினாமி சொத்துக்கள் எங்கே..? - விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி...!

சுருக்கம்

Jayalalithaa where is the property of Sasikalas property

ஜெயலலிதா, சசிகலாவின் பினாமி சொத்து எங்கெல்லாம் உள்ளது எனவும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சத்யம் சினிமாஸிடமிருந்து வாங்கியது எப்படி எனவும் விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் கட்டுப்பாட்டில்  ஜாஸ் சினிமா கம்பெனி இயங்கி வருகிறது. மேலும் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர்.நாளிதழ் விவேக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் மையப்புள்ளி விவேக் தான் என தெரிகிறது. 

இதையடுத்து இன்று விவேக்கை வருமான வரித்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜெயலலிதா, சசிகலாவின் பினாமி சொத்து எங்கெல்லாம் உள்ளது எனவும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சத்யம் சினிமாஸிடமிருந்து வாங்கியது எப்படி எனவும் விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 
 
PREV
click me!

Recommended Stories

கழுத்தில் துண்டு போட்டு காசு வாங்கிய திமுக எம்.எல்.ஏ..! ED -யிடம் சிக்கிய வாட்ஸ்-அப் ஆடியோ..!
Vijay - Seeman: உருவாகிறதா சீமான் - விஜய் கூட்டணி? முன்னணி நடிகர் நடத்திய பேச்சு வார்த்தையில் கிரீன் சிக்னல்.!