சொன்னா நம்புங்க! எம்.ஜி.ஆர்-க்காக அசைவம் சமைக்க கற்றுக் கொண்டார் அம்மு... தோழி இந்துமதி உடைக்கும் ‘அம்மா’டியோவ் ரகசியம்..!

By Vishnu PriyaFirst Published Feb 24, 2019, 2:04 PM IST
Highlights

ஜெயலலிதா அரசியல் பாதையில் காலெடுத்து வைக்கும் முன் சினிமா மற்றும் இலக்கிய வட்டாரங்களில் வெகுவே வெகு சில பெண் ஆளுமைகள் அவருக்கு மிக மிக நெருங்கிய தோழியராக இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் இந்துமதி. 

ஜெயலலிதா அரசியல் பாதையில் காலெடுத்து வைக்கும் முன் சினிமா மற்றும் இலக்கிய வட்டாரங்களில் வெகுவே வெகு சில பெண் ஆளுமைகள் அவருக்கு மிக மிக நெருங்கிய தோழியராக இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் இந்துமதி. 

ஜெயலலிதாவுடன் தான் பெரும் நட்புடன், நெருங்கிப் பழகிய நாட்களில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களையும், அப்போதிருந்த அம்மு (ஜெ.,)வின் குணங்களையும் சமீபத்தில் அசைபோட்டிருக்கும் இந்து, பகிர்ந்ததில் ஹைலைட் விஷயங்கள் இதோ.... 

* 1980-ல் தான் ஜெயலலிதாவை நான் முதலில் சந்தித்தேன். அஸ்வினி எனும் பத்திரிக்கை பேட்டிக்காக நான் அவரை காண சென்றபோது, போயஸ் இல்ல போர்டிகோவிலேயே வந்து வரவேற்றார். திறமைசாளிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் ஜெ.,விடம் இருந்ததை உணர்ந்தேன். 

* பிங்க் நிற புடவையில் அப்படியே தேவதை போலிருந்தார். 

* ஜெ., மிகப்பெரிய புத்தக வாசிப்பாளர், இலக்கிய விரும்பி. எங்கள் பத்திரிக்கையில் அவரை தொடர் எழுத வைக்க கேட்டேன், சம்மதம் என்றார்.  

* இதன் பின் தினமும் காலை, மாலையில் அவரை போயஸ் இல்லத்தில் சந்திக்குமளவுக்கு எங்கள் நட்பு நெருக்கமானது. அப்போதுதான் அவர் வாழ்க்கையில் உள்ள பெரும் துன்பங்களும், சோகங்களும் எனக்கு புலனாகியது. 

* மைசூர் யுனிவர்சிட்டியில் ரெண்டு பேரும் சேர்ந்தோம். அம்மு எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸும், நான் சைக்காலஜியும் சேர்ந்தோம். சென்னையில உள்ள ஒரு கல்லூரியில் நடந்த அந்த யுனிவர்சிட்டியின் கிளாஸுக்கு காலையில் 6  மணிக்கு போவோம். 

* எம்.ஜி.ஆர். மேலே ஜெ.,வுக்கு பெரும் பாசம், மரியாதை, அன்பு, நட்பு எல்லாமே இருந்தது. 

* நான் கறுப்பு பொட்டு வெச்சா ஜெயலலிதாவுக்குப் பிடிக்காது. உடனே சிவப்பு பொட்டு ஒன்றை எடுத்து அவரே வெச்சுவிடுவார், இல்லேன்னா தன் நெற்றியில் உள்ள பொட்டை வெச்சுட்டு அவர் வேற எடுத்துக்குவார். 

* அம்முவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் விதம்விதமா எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அதை என்னிடம் காட்டி மகிழ்வார். 

* ஜெ.,வின்  நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தவர்கள் வெகு சிலர்தான். அவர்களின் குழந்தைகளுக்கு வெளிநாட்டு சாக்லேட்ஸ், தன் தோட்டத்து திராட்சைகளை பெட்டி பெட்டியாய் அனுப்பி சந்தோஷப்படுவார். 

* எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங் இல்லாமலும், ஜெ.,வுக்கு ஷூட்டிங் இல்லாமலும் இருந்தால் எம்.ஜி.ஆர். போன் பண்ணுவார். ஒன்று அவர் போயஸ் இல்லம் வருவார், இல்லையென்றால் அம்மு அவரது தோட்டத்துக்கு போவார். 

* ஒரு உண்மை தெரியுமா? எம்.ஜி.ஆர்-க்கு அசைவ உணவுகளென்றால் கொள்ளைப் பிரியம். இதற்காகவே அசைவம் சமைக்க கற்றுக் கொண்டார் அம்மு. தன் மனதுக்குப் பிடித்த நபர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்பவர் அம்மு என்பதற்கு இதுதான் உதாரணம். ....இப்படி நீள்கிறது இந்துமதியின் மலரும் நினைவுகள். ’அம்மா’ என்றால் அன்புதான் போல!

click me!