ஜெ. தலைமையில் நடக்க வேண்டிய திருமணம் நினைவிடத்தில் நடந்து முடிந்தது

 
Published : Mar 02, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஜெ. தலைமையில் நடக்க வேண்டிய திருமணம் நினைவிடத்தில் நடந்து முடிந்தது

சுருக்கம்

jayalalitha leadership was able to walk the walk today in a memorial to her marriage

ஜெயலலிதாவின் தலைமையில் நடக்க வேண்டிய திருமணம், அவரது நினைவிடத்தில் இன்று நடந்து முடிந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டு தோறும் ஏழைகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படும். அதில் ஜெயலலிதாவின்  வயதை குறிக்கும் வகையில் திருமண ஜோடிகளை தேர்வு செய்து, அவர்களுக்கான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு, ஜெயலலிதா காலமானதால், அவரது பிறந்தநாளையொட்டி நடைபெறும் இலவச திருமணம் கேள்வி குறியாகிவிட்டது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பிலியம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவரது மனைவி கருப்பாத்தாள். இவர்களது மகன் சி.கே.சிவாஜி. நம்பியூர் பேரூராட்சி ஜெ. பேரவை இணை செயலாளராக உள்ளார்.

கோவை மாவட்டம் பாச்சர்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ராமாத்தாள். இவர்களது மகள் மஞ்சுளாதேவி (எ) மாசிலாமணி. இவருக்கும், சிவாஜிக்கும் திருமணம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்டது.

அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவர் உடல் நலம் தேறி வந்த பிறகு, ஜெயலலிதலைமையில் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கடந்த டிசம்பர் 5ம் தேதி, அவர் காலமானார். இதையடுத்து திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடத்து,, பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில், அவரது நினைவிடத்தில், அதிமுக பொது செயலாளர் சசிகலா தலைமையில், சிவாஜிக்கும், மஞ்சுளாதேவிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

ஆனால், சொத்து குவிப்பு வழக்கில்,பிப்ரவரி 15ம் தேதி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், இந்த திருமணமத்துக்கு மீண்டும் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், இரண்டு முறை தடைப்பட்ட திருமணம், மீண்டும் நிற்காமல் இருக்க, இன்று காலை, இரு வீட்டாரும், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றனர். அங்கு சிவாஜி மற்றும் மஞ்சுளா தேவி மாலை மாற்றி திருமணம் நடந்து முடிந்தது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு