’என்னத்த சாதிச்சீங்க..?’ நேரில் வந்த ஜெயலலிதா ஆவி... எடப்பாடியிடம் கேட்ட கேள்வி..? முறுக்கேற்றும் முரசொலி..!

By Thiraviaraj RM  |  First Published Oct 19, 2019, 4:17 PM IST

ஜெயலலிதா ஆவி எடப்பாடி பழனிசாமி முன் தோன்றி அப்படி என்னத்தச் சாதிட்டேன்னு..? என கேள்வி எழுப்புவது போலவும் அதற்கு ‘’ஹிஹி பதவியில நீடிக்கிறேனே பத்தாதா ஆத்தா? 


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவபட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை முரசொலி நாளிதழும் விமர்சித்துள்ளது. 

ஏ.சி.சண்முகத்தின்  எம்.ஜி.ஆர் கல்வி மற்று ஆராய்ச்சி நிறுவனமான எம்.ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம்  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டத்தை அறிவித்துள்ளது.  இந்நிலையில் திமுக நாளேடான முரசொலி ஒரு கார்ட்டுன் படத்தை இன்று வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

ஜெயலலிதா ஆவி எடப்பாடி பழனிசாமி முன் தோன்றி அப்படி என்னத்தச் சாதிட்டேன்னு..? என கேள்வி எழுப்புவது போலவும் அதற்கு ‘’ஹிஹி பதவியில நீடிக்கிறேனே பத்தாதா ஆத்தா? என பதிலளிப்பது போலவும் கேலி செய்து இந்த கார்ட்டூன் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில்  நேற்று ஜெயலலிதாவின் ஆவி மு.க.ஸ்டாலினை சும்மா விடாது எனப்பேசி இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், ஜெயலலிதா ஆவி எடப்பாடி பழனிசாமியுடன் பேசுவதாக முரசொலி நாளிதழ் கேலி சித்திரம் வெளியிட்டுள்ளது. 
 

click me!