ஸ்டாலினோட அப்பா ரொம்ப்ப்ப்ப நல்லவரு...! ஆமா, கமல் சொல்றதை நான் ஏத்துக்குறேன்.. ஜெயக்குமார் திடீர் திருவிளையாடல்கள்..!

Published : Apr 17, 2019, 02:12 PM IST
ஸ்டாலினோட அப்பா ரொம்ப்ப்ப்ப நல்லவரு...! ஆமா, கமல் சொல்றதை நான் ஏத்துக்குறேன்.. ஜெயக்குமார் திடீர் திருவிளையாடல்கள்..!

சுருக்கம்

அ.தி.மு.க.வின் மற்றும் தமிழக அரசாங்கத்தின் ‘மவுத் பீஸ்’ ஆக பார்க்கப்படுபவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். தன்னைத் தவிர இந்த உலகத்தில் எல்லோருமே, அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சியினர் அத்தனை பேருமே ‘டம்மி பீஸ்’ என்று நினைக்கும் கிட்டத்தட்ட முரட்டு பீஸ் அவர்! என்று ஜெயக்குமாரை விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமைச்சர் ஜெயக்குமாரின் வாயால் தாறுமாறாக வறுபடும் நபர்களில் மிக முக்கியமானவர்கள் மூன்று பேர் தினகரன், ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் மூன்று பேரையும் கொஞ்சம் கூட வஞ்சனையே இல்லாமல் வதக் வதக்கென வதக்கி எடுப்பதுதான் மீன் அமைச்சரின் ஒரே எய்ம். சமீபத்தில் ஸ்டாலினை செமத்தியாக ஒரு பிடி பிடித்தவர்....”ஸ்டாலினை போல் நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து பேசுவது கிடையாது.

என்னதான் அரசியல் எதிரி என்றாலும் கூட, இந்த மாநிலத்தின் முதலமைச்சரை ‘உதவாக்கரை’ என்றெல்லாம் பேசுகிறார். எல்லாக் கூட்டங்களிலும் ‘சூடு, சொரணை, மானம், வெட்கம், ரோஷம் இருக்குதா?’ன்னு கேக்குறார். வாய்க்கு வந்ததை பேசுறாருங்க அந்த மனுஷன். 

ஆனா அவங்க அப்பால்லாம் இப்படி கிடையாது. அவர் கூடவும் நாங்க வெகு காலமா அரசியல் பண்ணியிருக்கிறோம். இலைமறை காயாகதான் விமர்சிப்பாரே தவிர, இப்படி மோசமாக பேசவேமாட்டார். ஸ்டாலின் எவ்வளவு மோசமாக போனாலும் கூட நாங்க அப்படியில்லாம மிக நாகரிகமாகதான் பதில் சொல்றோம்.” என்றவர், கமல்ஹசனை பற்றிப் பேச ஆரம்பித்து...”இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் ஒழிக்கப்படணும்னு கமல்ஹாசன் பேசியிருக்கிறார். 

அவரை ஒரு ஓரமா போயி விளையாட சொல்லுங்க பாஸ். தமிழ்நாட்டுல அரசியல் போட்டின்னா அது அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில்தான். கிரவுண்டுலேயே இல்லாதவரெல்லாம் வாய் பேசினால் கண்டுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் கமல்ஹாசன் சொன்னதில் ‘தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டிய கட்சி’ என்பதை மட்டும் நான் ஏத்துக்குறேன். கண்டிப்பா அந்த கட்சியை ஒழிச்சுதான் ஆகணும்.” என்றவர், தினகரன் மற்றும் ஸ்டாலினின் கூட்டங்களுக்கு ஆட்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படுவதாகவும், தங்கள் கட்சிக்கு மட்டும் தானாக கூட்டம் சேருது! என்று பெருமையாக பேசியிருக்கிறார். அண்ணே, இதை ஆப்பம்-

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!