துரைமுருகன் மகனை மறந்துட்டீங்களா..? தயாநிதிக்கு ஜெயகுமார் கிடுக்குப்பிடி கேள்வி..!

Published : Jun 25, 2019, 06:18 PM IST
துரைமுருகன் மகனை மறந்துட்டீங்களா..? தயாநிதிக்கு ஜெயகுமார் கிடுக்குப்பிடி கேள்வி..!

சுருக்கம்

நாடு போற்றும் உத்தமர், காந்தியின் மறு வாரிசாக, ஏழ்மையில் நிலையில் இருக்கும் தயாநிதி மாறன் இன்று வாயை திறந்து இருக்கிறார்'' என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  

நாடு போற்றும் உத்தமர், காந்தியின் மறு வாரிசாக, ஏழ்மையில் நிலையில் இருக்கும் தயாநிதி மாறன் இன்று வாயை திறந்து இருக்கிறார்'' என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி., தயாநிதி மாறன் மத்திய அரசையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். 

இதற்கு சென்னையில் இன்று பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ''யார் நாடாளுமன்றத்தில் பேசுவது என்று இல்லாமலே போய்விட்டது. நாடு போற்றும் உத்தமர், காந்தியின் மறு வாரிசாக, ஏழ்மையில் நிலையில் இருக்கும் தயாநிதி மாறன் இன்று வாயை திறந்து இருக்கிறார். ஊழல் நிறைந்தது அதிமுக ஆட்சி. எனவே தேர்தலில் பணத்தை முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெற முடியவில்லை என்ற கருத்தை வைத்தார். தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்தது. எங்களுக்கு பணத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆதலால் நாங்கள் கொடுக்கவில்லை. 

இந்தியாவிலேயே ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுக்க முயற்சிக்கப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதியை மறந்துவிட்டு பேசலாமா? சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் துரைமுருகனின் மகன் போட்டியிட்ட தொகுதிதான் வேலூர். இது தயாநிதி மாறனுக்கு தெரியாதா? நாட்டு மக்களுக்கு தெரியாதா? பூனை கண் மூடிவிட்டால், உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வார்கள். அதன் அடிப்படையில் அவரை உத்தமன் என்று அவர் நினைத்துக் கொள்கிறார்' எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

CM Net Worth: தமிழகம், புதுவை, கேரளா, 5 மாநில முதல்வர்களில் யார் ரிச்?
தேர்தல் களத்தில் களைகட்டும் நம்ம ஊரு கலைகள்... பிரச்சாரத்தை தெறிக்கவிடும் கலைஞர்கள்!