
திமுக எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் கூட்டத்தில் ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை நிறுவனங்களை மீட்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் , யார் சொத்தை யார் கைப்பற்றுவது என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்பன உள்ளிட்ட 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் ஜெயா டி.வி-யும் , நமது எம்.ஜி.ஆர்' நாளிதழும் கழகத்தின் சொத்துகள். எனவே, அவற்றை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயா டி.வி-யின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆரை மீட்க தீர்மானம் நிறைவேற்றியது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர்.நாளேடு தனியார் நிறுவனங்கள் என்றும் யாரும் சர்வ சாதரணமாக உள்ளே புகுந்து கைவசமாக்கக் கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
.இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா தொலைக்காட்சியை மீட்கப் போவதாக தீர்மானம் இயற்றி இருப்பது மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டலாகத்தான் தெரிகிறது என்று விவேக் தனது அறிக்கையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.