அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கும் என ஜம்முகாஷ்மீர் அரசு அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Feb 14, 2020, 10:01 PM IST
Highlights

அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கும் என ஜம்முகாஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது

 by.T.Balamurukan

அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கும் என ஜம்முகாஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த பகுதிக்கு வரும் பக்தர்கள் அங்கு இருக்கும் சிவபெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது என  ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஜம்முகாஷ்மீர் ,கவர்னர் கிரீஷ் சந்திரமுர்மு தலைமையில்  37-வது கூட்டம்  நடைபெற்றது. அதில்,அமர்நாத் யாத்திரை 42 நாட்கள் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!