அடப்பாவி அதுக்காக இப்படியா பண்ணுவாரு ! ஜக்கி வாசுதேவ் செய்த அதிரடி வேலை !!

By Selvanayagam P  |  First Published Jul 30, 2019, 9:17 AM IST

அதிக கண் திருஷ்டி பட்டிருப்பதால் அதைப் போக்க உடல்நிலை சரியில்லை என்று வலை தளங்களில் ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்கள் அவரது  புகைப் படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கோவை சாமியார் ஜக்கி வாசுதேவ் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்திரேலியாவில் படுத்திருப்பதாக திடீரென பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவியது. அதில், ஜக்கி கலைந்த தோற்றத்துடன் மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டிலில் படுத்திருப்பதாக ஒரு புகைப்படமும் வெளியானது. 

இது இந்தியா முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா என பலரும் விசாரிக்க தொடங்கினார்கள். பல்வேறு அரசியல் தொடர்பு அவருக்கு இருப்பதால் இந்த செய்தி வேகமாக பரவியது.

Tap to resize

Latest Videos

undefined

ஆனால் ஜக்கி வாசுதேவ் எப்போதும் போல அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து ஈஷா யோகா மையத்தில் விசாரித்தபோது , கருணாநிதிக்கு  அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று செய்தி வரும். அதனால் அவர் நீண்ட காலம் வாழ்ந்தார். 

அதேபோல் ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்தால், அவருக்கு இப்பொழுது கிடைத்திருக்கும்  புகழால் ஏற்பட்ட திருஷ்டி கழிந்துவிடும் என்பதால் இந்த செய்தி பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!