எங்களை காப்பாற்ற தலைவர் இருக்காரு.. நீங்கள் உங்க வேலையைப் பாருங்க.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெ.அன்பழகனின் மகன்.!

Published : Jun 26, 2020, 07:20 PM ISTUpdated : Jun 26, 2020, 08:16 PM IST
எங்களை காப்பாற்ற தலைவர் இருக்காரு.. நீங்கள் உங்க வேலையைப் பாருங்க.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெ.அன்பழகனின் மகன்.!

சுருக்கம்

எங்களைப் பாத்துக்கவும், எங்க குடும்பத்தைப் பாத்துக்கவும் எங்க தலைவர் இருக்கிறார். தயவு செய்து இந்த மாதிரி பேட்டி கொடுப்பதையும், அறிக்கை விடுவதை விட்டுட்டு  மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றுங்கள் என ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் கூறியுள்ளார். 

எங்களைப் பாத்துக்கவும், எங்க குடும்பத்தைப் பாத்துக்கவும் எங்க தலைவர் இருக்கிறார். தயவு செய்து இந்த மாதிரி பேட்டி கொடுப்பதையும், அறிக்கை விடுவதை விட்டுட்டு  மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றுங்கள் என ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-  மருத்துவ நிபுணர்குழு அறிவுரைகளை பின்பற்றியிருந்தால் ஒரு எம்எல்ஏவை இழந்திருக்க அவசியமில்லை. அதிகாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் திமுக வழங்கியிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. மேலும் அதற்கு மு.க ஸ்டாலின் அலட்சியமே காரணம் என்றும் முதல்வர் கூறியிருந்தார். 

இந்நிலையில் ஜெ. அன்பழகன் உயிரிழந்து நேற்றுடன் 16 நாட்கள் நிறைவடைகிறது. இதனிடையே, முதல்வர் பழனிசாமி அன்பழகனின் மறைவு குறித்து கூறிய கருத்திற்கு ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். நான் ராஜா அன்பழகன் பேசுறேன். இன்று என் தந்தை மறைந்து 16ம் நாள். இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனாவால் திமுக ஒரு எம்.எல்.ஏ.வை பலிகொடுத்துவிட்டது என்று பேசியிருக்கிறார்.

அடிமட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களின் இல்லம் சென்று வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை கொச்சைப்படுத்துவதோடு, இந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிட்டது என்ற வயிற்றெரிச்சலால்தான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

இன்று காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். அப்படியென்றால் அதற்கெல்லாம் அரசாங்கம்தானே பொறுப்பு? அரசாங்கத்தின் பொறுப்பில்லாத காரணத்தால்தானே அவர்கள் உயிரிழந்தார்கள். இதை ஒத்துக்குறீங்கள்ல? நீங்க செய்ய வேண்டிய வேலையை நாங்க செஞ்சுக்கிட்டிருக்கோம். எங்க தலைவர் செஞ்சுக்கிட்டிருக்காரு. 

 

 

அதை உங்களுக்குக் பொறுத்துக்க முடியலை. எங்களைப் பாத்துக்கவும், எங்க குடும்பத்தைப் பாத்துக்கவும் எங்க தலைவர் இருக்காரு. தயவு செய்து இந்த மாதிரி பேட்டி கொடுக்குறது, அறிக்கை கொடுக்குறது இதெல்லாம் விட்டுட்டு மக்களை கொரோனாவுலேர்ந்து பாதுக்காக்க என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுங்க. எங்க தலைவரைப் பத்தி பேசிக்கிட்டிருக்க இது நேரம் கிடையாது. இது சட்டப்பேரவை கிடையாது. உங்க வேலைய நீங்க பாருங்க. எங்க வேலைய நாங்க பார்க்குறோம் என்று கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!