துரைமுருகனுக்கு எல்லாமே "K" தான்!!! ஒர்க் அவுட் ஆகுமா S...?

By sathish kFirst Published Aug 28, 2018, 5:38 PM IST
Highlights

தெரிந்தும் தெரியாமலும் இவருக்கு சென்டிமென்டாக இருப்பது "K", இந்நிலையில் இன்று தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவரான முக ஸ்டாலினுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் இவருக்கு "S" சென்டிமென்ட் எந்தளவிற்கு வொர்க்அவுட் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

திமுக வின் பொருளாளராக இன்றைய தினம் பதவி ஏற்றிருக்கும் துரைமுருகனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு கட்சியின் தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் எவ்வித போட்டியும் இன்றி தேர்வு செய்யபட்டிருக்கின்றனர். ஒரு மிகப்பெரிய கட்சியில் இப்படி ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் கலைஞரின் தளபதி என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவை உணர்வுடன் பதிலளிக்கும் இவர் தன்னுடைய அரசியல் போராட்டத்தை மாணவப்பருவத்திலேயே துவங்கி இருக்கிறார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஒரு மாணவராக் இவர் எடுத்த முயற்சிகள் ஆரம்பம் முதலே இவருக்கு கட்சி மேலிடத்தில் நன்மதிப்பை பெற்று தந்தது. 

கல்லூரி விழா ஒன்றின் போது துரைமுருகனின் பேச்சாற்றலால் வியந்த எம்.ஜி.ஆர் அவரின் படிப்பிற்கான முழு செலவையும் தானே ஏற்று படிக்க வைத்தார். எம்.ஜி.ஆரின் செல்ல பிள்ளையாக இருந்த துரைமுருகன், இளம் வயதிலேயே அண்ணா தலைமையிலான திமுகவில் தான் இருந்து வந்தார். அப்போதே அவருக்கும் கலைஞருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்துவந்தது.

எம்.ஜி.ஆர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திமுகவை விட்டு பிரிந்து சென்ற போது அவருடன் துரைமுருகன் வெளியேறிவிடுவார் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி வேறு எம்.ஜி.ஆர் மீதான தனிப்பட்ட பாசம் வேறு என கட்சி விஷயத்தில் தன் நிலைப்பாட்டை காட்டிய துரைமுருகன், தன்னுடைய 33வது வயதில் தேர்தலில் போட்டியிட்டு வெற்று பெற்று சட்ட மன்ற உறுப்பினராகி இருக்கிறார்.

தொடர்ந்து பல இடங்களில், பல தருணங்களில்  இவர் கலைஞருக்கு ஆதரவாக இருந்து அவரின் தளபதியாகவே செய்லபட்டார். கடைசி வரை அவர் மீதான கலைஞரின் நம்பிக்கைக்கு எந்த பங்கமும் விளைவிக்காத இவர் வாழ்க்கையில் “K” எனும் எழுத்து பல காரணங்களால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 

இவர் பிறந்த ஊர்  காட்பாடி பகுதியில் கேவி குப்பம் அருகில் உள்ள காங்குப்பம்... K 

துரைமுருகனின் ஆஸ்தான தொகுதி காட்பாடி...K

காட்பாடி காந்திநகர் டவுன்ஷிப்பில் அமைந்துள்ள பிரமாண்ட வீடு இருக்கும் பகுதியின் பெயர் காங்கேய நல்லூர் ஊராட்சி... K

காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள அவரது கலோரின் பெயர் கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரி ... K 

சென்னையில் பலவருடங்களாக வசிக்கும் வீடு கோட்டூர்புரம்... K

அவரது ஒரே மகனின் பெயர் கதிரானந்த்... K  

இவற்றை எல்லாம் விட மேலாக இவர் கடைசி வரை இணைபிரியாமல் இருந்தது கருணாநிதியுடன். இப்படி “K” எனும் எழுத்து இவர் வாழ்க்கையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

ஆனால் தற்போது இவர் கைகோர்த்திருப்பது ஸ்டாலினுடன், ‘S” எனும் எழுத்து தான் இனி அவரது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவரப்போகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த எழுத்து ஜோசியம்.. இதன் பலன் என்னவாக இருக்கும் என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

சாய்பாபாவின் அதி தீவிர பக்தரான துரைமுருகன் குடும்பத்தினருக்கு S சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகும் என அடித்து கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்

click me!