திமுக உட்கட்சி தேர்தலில் மா.செ உள்ளடி வேலை...? கட்சி மாற தயாராகும் மூத்த நிர்வாகிகள்..! காத்திருக்கும் பாஜக..

By Ajmal KhanFirst Published Aug 14, 2022, 3:04 PM IST
Highlights

திமுகவின் உட்கட்சி தேர்தல் பல மாவட்டங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தங்களது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் செயல்படுவதால் அதிருப்தி அடைந்துள்ள மூத்த நிர்வாகிகள்  மாற்று கட்சிக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

உட்கட்சி தேர்தல்- மோதல்கள்

திமுக உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பல இடங்களில் திமுகவினர் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் சம்பவம் பரவலாக நடைபெற்றுள்ளது. குன்றத்தூர் திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகியை அக்கட்சியினரே கடுமையாகத் தாக்கினர். சட்டை கிழிந்த நிலையில் வெளியேறிய திமுக பிரமுகர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போல திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லையென கோரி திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற பிரச்சனை ஒரு இடத்திலோ சில இடத்திலோ நடைபெறுவது இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெறுவதாக திமுக மாவட்ட அளவிலான மூத்த  நிர்வாகிகள் புகார் கூற தொடங்கியுள்ளனர்.

உட்கட்சி தேர்தலை நடத்தும் அதே வேளையில் திமுக எதிர்கட்சியாக இருந்த கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமாக உட்கட்சி தேர்தலை நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால்  திமுக தலைமை விதித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் ஆங்காங்கே மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் காற்றில் பறக்க விட்டு அதன் பலனாக பதவிகளை நட்சத்திர ஹோட்டல்களில் வைத்து ஏலம் விடுவதாகவும் கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

யார் இந்த டாக்டர் சரவணன்..! எத்தனை கட்சி மாறியுள்ளார் தெரியுமா..? அதிர வைக்கும் பரபரக்கும் தகவல்

மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு

ஒன்றிய செயலாளர், பேரூர் செயலாளர்,செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் தலைமுறை,தலைமுறையாக இருந்து வரும் திமுகவினர் மாற்றப்பட்டு ஓரங்கட்டப்படுவதாகவும் புகார் கூறிவருகின்றனர். மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பல லட்ச ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகிகளால் பொறுப்புகள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் என்றும் பாராமல் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த புல்லானி, காந்தி, ஜீவானந்தம் உட்பட மொத்தம் நான்கு நிர்வாகிகளை மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் திமுக தலைவரை மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோரை பார்க்க பல முறை சென்னை சென்றும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் மாவட்டத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல் முறைகேடு தொடர்பாக  வீடியோவும் வெளியிட்டு தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

விரும்பதகாத நிகழ்வில் ஈடுபட்ட பாஜக...! டாக்டர் சரவணன் செய்தது சரிதான்..! ஆர்.பி.உதயகுமார்

திமுகவினருக்குள் மோதல்

மேலும்  திருப்புல்லாணி மேற்கு, மண்டபம் கிழக்கு மற்றும் மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர்கள். கடந்த பத்து வருடங்களாக திமுக எதிர்கட்சியாக இருந்த நேரத்திலும் சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதம், என கழகத்திற்காக உழைத்த ஒன்றிய செயலாளர்கள் இன்று பழிவாங்கப்பட்டு  பதவியை இழந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவினருக்குள் ஒற்றுமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மூத்த திமுக நிர்வாகிகள் மனக்குமுறலை கூறி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் கண்ணப்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாவட்ட அமைச்சர் தங்கள் பகுதிக்கு வருகை தரும் போது அவர் படத்தை விளம்பரத்தில் வைத்தால் சம்பந்தப்பட்ட ஒன்றிய செயலாளர் ஒதுக்கி வைக்கப்படுவதாகவும், மாவட்ட அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதி கோரிக்கையை கூறினாலும் அவர்களையும் திமுக நிகழ்ச்சிக்கு அழைக்காமல் ஒதுக்கி வைக்கும் நிலை தொடருவதாக வேதனையோடு தெரிவித்துள்ளனர்.

கட்சி மாற தயாராகும் உடன்பிறப்புகள்

மாவட்ட அளவில் தலை தூக்கியுள்ள இந்த பிரச்சனையை அறிவாலயம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனால் திமுக தலைமை நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதால் மாற்று கட்சிக்கு செல்லலாமா? எனவும் திமுக மூத்த நிர்வாகிகள்  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை வலைக்க பாஜக திட்டமிட்டு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பாஜகவிற்கு சாதகமாக அமைந்து விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை..! காவல்துறை இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கிறது- இபிஎஸ்

 

click me!