என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா? சொடக்கு போட்டு சவால் விடும் குஷ்பு..!

Published : Jan 02, 2021, 01:38 PM IST
என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா? சொடக்கு போட்டு சவால் விடும்  குஷ்பு..!

சுருக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாட்களில் பாஜக அறிவிக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாட்களில் பாஜக அறிவிக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு புதுப்பேட்டை கொய்யா தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பொதுமக்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கேட்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. தேவையில்லாமல் குழப்பம் வேண்டாம். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை தான் முடிவு செய்யும். அதுதான் மரபு. முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சைக்கு 4 அல்லது 5 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். 

மேலும், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதைப்போல் சித்தரிக்கப்படுகிறது. பாஜக தலைமை வாய்ப்பளித்தால், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார். சட்டமன்ற தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!