பெண்களை விபச்சாரிகள் என சொல்லும் திருமாவளவன்லாம் ஒரு ஆளா..? பொசுக்கென்று காரியத்தில் இறங்கிய காயத்ரி..!

Published : Oct 22, 2020, 05:23 PM IST
பெண்களை விபச்சாரிகள் என சொல்லும் திருமாவளவன்லாம் ஒரு ஆளா..? பொசுக்கென்று காரியத்தில் இறங்கிய காயத்ரி..!

சுருக்கம்

நதிகள் அனைத்தும் பெண்கள் பெயரில் உள்ளது, அப்படியிருக்கையில் பெண்கள் பற்றி தவறாக பேசும் திருமாவளவன் எந்த வகையான மனிதர் ? 

தொடர்ந்து இந்து கடவுள்களை, இந்து கோவில்களை இழிவாக பேசி இந்துக்கள் மனம் புண்படும்படி பேசி வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமிதாஷா, குடியரசு தலைவர், மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம்.

ஏற்கனவே பலமுறை இந்துக்கள் மனம் புண்படும்படி பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி வரும் திருமாவளவன் சமீபத்தில் பெரியார் வளைவாசி என்ற இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், இந்து சனாதனத்தில் அணைந்து பெண்களும் விபச்சாரிகள் என்று அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார்.

’’இந்து சனாதன தர்மம் பற்றி மோசமாக பேசியதற்காக திருமாவளவனை கைது செய்ய வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன் மீது அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டும், நமது தர்மத்திற்கு எதிராக பேசுவது நம் நாட்டுக்கு எதிரானது என்று தெரிவித்த காயத்ரி ரகுராம், மேலும் நம் நாட்டை பாரத மாதா என்று நாம் அழைக்கிறோம், பார்வதி, லட்சுமி, அம்மன் மற்றும் சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களை வணங்குகிறோம்.

நதிகள் அனைத்தும் பெண்கள் பெயரில் உள்ளது, அப்படியிருக்கையில் பெண்கள் பற்றி தவறாக பேசும் திருமாவளவன் எந்த வகையான மனிதர் ? என கேள்வி எழுப்பியவர் நீங்கலாம் ஒரு ஆள்…சீ… என்று குறிப்பிட்ட காயத்ரி ரகுராம், இந்து தர்மத்தை பற்றி அடிப்படை தெரியாமல் அவரது முட்டாள் தனமான பேச்சுக்களை கேட்டு கேட்டு மக்களுக்கு போர் அடித்து விட்டது என்று வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம், உள்த்துறை அமைச்சர், குடியரசு தலைவர், மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரிடம் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க சமூக வலைதள மூலம் வலியுறுத்தி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சித்திரவதையின் நரகம்..! பாஜக ஆட்சியில் நாட்டில் பரவும் பேராசையின் தொற்றுநோய்... ராகுல் அட்டாக்..!
திமுகவை வீழ்த்த பிளான் ரெடி.. தீய சக்தியை வேரறுப்பேன்.. சபதம் எடுத்த சசிகலா!