ப.சிதம்பரத்தை வச்சு செய்யும் மத்திய அரசு... சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் அதிரடி..!

Published : Oct 16, 2019, 12:27 PM IST
ப.சிதம்பரத்தை வச்சு செய்யும் மத்திய அரசு... சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் அதிரடி..!

சுருக்கம்

சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்று காலை 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ கைது செய்தது.

பின்னர் அவருடைய காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நாளை (வியாழக்கிழமை) வரை நீட்டித்து உள்ளது.

இந்நிலையில், சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்று காலை 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, திகார் சிறையில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!