பெண்ணின் மீது அவதூறு பரப்புவதைவிட கீழ்த்தனம்... ஆடிட்டர் குருமூர்த்தியை கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Dec 10, 2019, 3:48 PM IST
Highlights

திராவிட இயக்கங்களை பழிப்பது என்பது தன்னை ஏறெடுத்து பார்க்க மறுக்கும் பெண்ணின் உத்தமத் தனத்தின் மீது அவதூறு பரப்புகிற கீழான காரியமே என ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. 
 

திராவிட இயக்கங்களை பழிப்பது என்பது தன்னை ஏறெடுத்து பார்க்க மறுக்கும் பெண்ணின் உத்தமத் தனத்தின் மீது அவதூறு பரப்புகிற கீழான காரியமே என ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

 

இதுகுறித்து அதிமுகவில் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில், பூவும் முள்ளும் ஒன்றோ... பொத்தாம் பொதுவெனல் நன்றோ... என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள கட்டுரையில், ‘’தமிழகத்தின் கலாச்சாரத்தை எழுபது ஆண்டுகளாக இரு கட்சிகளும் அழித்து விட்டன என்று போகிற போக்கில் திமுகஓடு அதிமுகவையு ஒன்றாக்கி விமர்சிக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. 

இந்தியாவின் பொக்கிஷமான கலாச்சார பெருமை தென்கோடி தமிழகத்தில் குலையாது கொழித்து நிறிகிறது என்பதால் தான் இந்நட்டின்  பிரதமர் மோடி சீன அதிபரை அழைத்துக் கொண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லைக்கு வந்து வெகுநேரம் அமர்ந்து விலாவாரியாக உலக அரசியலை விவாதித்து போகிறார் என்பதை இவ்வுலகம் அறியும்.

 

முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி, அச்சுதாந்த மேனன் மல்லிகார்ஜூன கார்க்கே என்றெல்லாம் அனு தொடங்கி, இன்று வரை அரசியலமைப்பு சட்டத்தின் பெயரால் பிரமாணம் மேற்கொண்டு அதிகாரச் செங்கோலை ஏந்துகிற முதல்வர்கள் கூட நான் இன்ன சாதியை சேர்ந்தவன் என்பதனை பெயரோடு இணைத்துக் கொண்டு பெருமை பேசுகிற அரசியல் உலகில்  தமிழகம் ஒன்று தான் அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா, ஓ.பி.எஸ், எடப்பாடியார் என்று பெற்றோர் இட்ட பெயரோடு தான் ஆற்றுகிற தொண்டு தான் தனக்கான அடையாளம் என அறிவார்ந்த பகுத்தறிவை உலகிற்கே முன் நிறுத்துவது திராவிட பூமி என்பதை இந்த நாடு அறியும். 

பெண் விடுதலை மகளிர் மேம்பாடு, மொழிப்பற்று சாதி மத பூசல் இல்லாத சமத்துவ நிலை, சமூக நீதியை இந்தியாவுக்கே போதிக்கும் அளவில் இட ஒதுக்கீடு கொள்கைகள் மகளிர் மேம்பாடு, உலகத்தின் முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்ப்பது என்றெல்லாம் நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலமாகி முக்கடல் சூழ்ந்த பாரதம் முன் வைக்கும் விருதுகளில் மூன்றில் ஒரு பங்கை வென்று வரும் மாநிலம் தமிழகம் என்பதோடு இந்தியாவுக்கே ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரம் பில்லியன் டாலர்களை வருவாயாக அள்ளித் தரும்  இந்தியாவில் 2 வது உற்பத்தி மாநிலம் என்கிற உச்சத்தை இந்த மண் தொட்டு நிற்பதற்கு உழைத்த இயக்கம் திராவிட இயக்கம். 

இவ்வாறு இருக்க பொத்தாம் பொதுவாக திராவிட இயக்கங்களை பழிப்பது என்பது தன்னை ஏறெடுத்து பார்க்க மறுக்கும் பெண்ணின் உத்தமத் தனத்தின் மீது அவதூறு பரப்புகிற கீழான காரியமே.

 

அதெல்லாம் சரி, திராவிடம் சீரழிந்தது என்றால், அதிமுகவிற்கு வாக்களிப்பீர் என்று சோ பலமுறை தனது பத்திரிக்கையின் வாயிலாக கோரிக்கை விடுத்தாரே, அதுபோலவே திமுகவுக்கு த.மா.காவை சேர்த்து விட்டு ரஜினியை கூட வாய்ஸ் கொடுக்க வைத்தாரே, அப்படியென்றால் திராவிடத்தின் சீரழிப்புகளில் சோவுக்கும் பங்கு இருக்கிறது  என்று ஒப்புக்கொள்கிறாரா? ஆடிட்டர் குரு மூர்த்தி. இல்லை தனக்கு சோ மீது இருக்கும் வெறுப்பை விமர்சனங்கள் என்ற பெயரிலேயே வெளிப்படுத்துகிறாரோ..?  என்ன செய்வது எழுதுகோல் பிடிப்பவர்களில் சிலர் தங்களை செங்கோலை தீர்மானிக்கிற சக்திகள் என்பதாக கற்பனை செய்து கொள்வதான் வருகிற மமதை  பேச்சுகள் தானே இவையெல்லாம்’’என விமர்சித்துள்ளது.   

click me!