ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து கொண்டிருந்தவர்கள் இன்று வழக்கிற்கு அஞ்சு பயந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதால் யாரையாவது பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியால் திமுகவிற்கு ஆட்சியை கொடுத்த மக்கள் இன்றைக்கு ஏன் வாக்களித்தோம் என்று வருந்தி கொண்டிருப்பதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட செயல் வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த டிடிவி.தினகரன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய அவர்;- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கு உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட அமமுகவில் ஒன்றிணைய வேண்டும். வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். எம்.ஜி.ஆரின் கட்சியும், சின்னமும் நயவஞ்சகர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. அங்கு வேறு வழியில்லாமல் சிக்கியுள்ள தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நோக்கி வரக்கூடிய காலம் நெருங்கி விட்டது.
undefined
இதையும் படிங்க;- சசிகலா,தினகரனுடன் இணைந்து செயல்படுமாறு கூறினாரா ஓபிஎஸ்..? திடீர் விளக்கம் அளித்த தேனி மாவட்ட செயலாளர்
ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து கொண்டிருந்தவர்கள் இன்று வழக்கிற்கு அஞ்சு பயந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதால் யாரையாவது பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள்.
மேலும், திமுகவினர் திருந்தி இருப்பார்கள் நினைத்து மக்கள் அவர்களிடம் ஆட்சியை கொடுத்ததாகவும், ஆனால், இன்று வருந்தி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். விலைவாசி உயர்வால் மக்கள் வறுமையில் வாடிவருகின்றனர். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளித்த பொதுக்குழு உறுப்பினர்கள்...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆலோசித்ததால் பரபரப்பு